இயேசுவின் காலத்து யூதர்கள் எதிர்பார்த்திருந்த அந்த மூன்று நபர்கள்

வரலாற்றில் பல இறைத்தூதர்கள் அவ்வப்போது மனிதகுலத்திற்கு வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டனர்.அந்த இறைத்தூதர்களைப் பற்றி முன்னர் வாழ்ந்த சமூகங்களிடம் இறைவன் முன்னறிவித்திருந்தான்.அந்த வரிசையில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும் முன்னறிவிக்கப்பட்ட மூன்று நபர்களை எதிர்பார்த்திருந்தனர்.அவர்கள் யார்? இதோ பைபிளின் துணைகொண்டு ஆராய்வோம்.

''எருசலேமிலிருந்த யூதர்கள் ஆசாரியரையும்,லேவியரையும், யோவானிடத்தில் அனுப்பி நீர் யார்? என்று கேட்டபோது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது  மட்டுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.அப்பொழுது அவர்கள் பின்னர் யார்? எலியாவா? என்று கேட்டார்கள்.அதற்கு நான்  அவனல்ல என்றான்.நீர் தீர்க்கதரிசியானவரா? அதற்கும் அல்ல என்றான்.'' (யோவான் 1:19-22)

யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்தவர்.அவர் மக்களை சீர்படுத்தும்போது யூதர்கள் அவரிடம் மூன்று கேள்விகளை கேட்டுள்ளனர். நீர் கிறிஸ்துவா? எலியாவா? தீர்க்கதரிசியானவரா? என்பதே அந்த கேள்விகள்.அந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த யோவான் இந்த மூன்று நபரும் நானல்ல என்று பதிலளித்துள்ளதை மேலே கூறப்பட்ட பைபிளின் வசனத்தினடிப்படையில் அறிந்துகொள்ளலாம்.

யூதர்கள் எதிர்பார்த்த எலியா யோவான்தான் என்பதை இயேசுவே கூறுகிறார்.

''அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே,அதெப்படி என்று கேட்டார்கள்.இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான்.ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்.இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார்.அவர் யோவான் ஸ்நானகனை குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்போது அறிந்துகொண்டார்கள்.'' (மத்தேயு 17:11-13)

முன்னைய வேதங்களில் முறையே எலியா,கிறிஸ்து,தீர்க்கதரிசியானவர் என்று மூன்று நபர்கள் வந்து உலகை சீர்படுத்துவார்கள் என்று  சொல்லப்பட்டிருந்தது.அதனால்தான் இயேசு சமூகத்தை  சீர்திருத்தும் சந்தர்ப்பத்தில் நீர் கிறிஸ்துதான் என்றால் உமக்கு முன் எலியா வரவேண்டுமே என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தனர். அந்த கேள்விக்கான பதிலாகத்தான் இயேசு எலியா என்பது யோவான்தான் என்பதை தெளிவுபடுத்தினார்.யோவானிடம் மக்கள் தாங்கள் எலியாவா என்று கேட்டபோது தான் எலியா அல்ல என்று ஏதோ ஒரு காரணத்திற்காக பதிலளித்துள்ளார்.

ஆக யூதர்கள் எதிர்பார்த்த எலியா வந்தாயிற்று.கிறிஸ்துவும் வந்தாயிற்று.தீர்க்கதரிசியானவரும் வரவேண்டுமே.யோவான் (யஹ்யா நபி);,இயேசுவுக்குப்பின் தீர்க்கதரிசியென்று வாதிட்டவர் முஹம்மது நபி மட்டுமே.யூதர்கள் எதிர்பார்த்த மூன்று நபர்களில் தீர்க்கதரிசியானவரை எதிர்பார்த்துத்தான் மதீனாவில் யூதர்கள் குடியேறினார்கள்.இல்லையென்றால் அவர்களுக்கும் மதீனாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எனவே அன்பின் கிறிஸ்தவ சகோதர,சகோதரிகளே! உங்களது வேதநூலான  பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியான முஹம்மது நபியை ஏற்று பரலோகராஜ்யத்தில் வெற்றிபெறுங்கள்.

Comments