ஆபாசங்களின் உறைவிடமா பைபிள்?

ஒட்டுமொத்த கிறிஸ்தவ அன்பர்களும் இறைவேதம் என்று போற்றும் பைபிள் உண்மையிலேயே இறைவேதம்தானா என்பதை கிறிஸ்தவ  அன்பர்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டவேண்டிய ஒரு சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.பைபிளை படிக்கும்போது உலகத்திற்கே வழிகாட்டும் இறைவனது வார்த்தைகள் இவ்வாரெல்லாம் இருக்குமா? சாதாரணமாக மனிதர்களான நாமே பொதுப்படையாக பேச கூச்சப்படும் விடையங்களை இறைவன் சர்வசாதாரணமாக,படிக்கும்பேகாதே உணரச்சிகளை தூண்டக்கூடிய விதமாக இறைவேதத்தில் கூறுவானா? இவ்வாரான அசிங்கங்களை இறைவேதத்தில் கூறுவதால் மக்களுக்கு என்ன படிப்பினை? உதாரணத்திற்கு சில.....

தந்தையும் மகள்களும் ??????

''பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த பவயதானால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதாமய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.'' (ஆதியாகமம் 19:31-37)

மாமனாரும் மருமகளும் ??????

''சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனையாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைப்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்கப் போகிற வழியிலே ஏனாயீம் ஊருக்கு வெளியே சந்தியில் உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அவள் வழியில் இருந்த இடமாய்த் திரும்பி, அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னோடு சேர இடம் கொடு என்றான். அதற்கு அவள்: நீர்என்னோடு சேருகிறதற்கு எனக்கு என்ன தருவீர்என்றாள். அதற்கு அவன், நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்று சொல்ல, அவள், நீர்அதை அனுப்பும் அளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவள்: உம் முத்திரை மோதிரமும் உமது தாழ்வடமும் உமது கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து அவளோடு சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பந்தரித்து, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து தன் கைப்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள்.''(ஆதியாகமம் 38:14-19)

மைத்துனனும் மைத்துனியும் ????

''அப்பொழுது யூதா ஓனானைப் பார்த்து, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்திரமாய்ப் படைத்து, உன் தமயனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனின் மனைவியைச் சேரும் போது தன் தமயனுக்குச் சந்ததி உண்டாகாதபடி தன் வித்தைத் தரையிலே விழ விட்டுக் கொடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வையில் தீயதாயிருந்ததினால் அவனையும் அவர்அழித்துப் போட்டார்.''(ஆதியாகமம் 38:8-10)

கிழவனும் குமரியும் ?????

''தாவீது ராஜா வயது முதிர்ந்தவனான்; போர்வைகளினால் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை. அப்பொழுது அவன் ஊழியர்அவனிடம் வந்து: கன்னிகையான ஒரு வாலிபப் பொண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவது நலம்; அவள் ராஜா சமூகத்தில் நின்று ராஜாவுக்குப் பணிவிடை செய்து, ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உமது மடியிலே படுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள். அப்படியே அவர்கள் இஸ்ரவேலின் நாடெங்கும் அழகான ஒரு வாலிபப் பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடம் கொண்டு வந்தார்கள் ''(முதலாம் ராஜாக்கள் 1:1-3)

தாவீது ராஜாவும்,அடுத்தவன் மனைவியும்????

''ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது ( டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும்இ எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய பத்சேபாள் – என்றார்கள்.அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்இ அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான்.''( இரண்டாம் சாமுவேல் 11:2-5)

சொல்வதற்கே நாகூசுகின்ற விடையங்களை இறைவனது பெயரால் வைத்துக்கொண்டு அதை  இறைவேதம் என்று போற்றுவது எவ்வளவு அறியாமை? கிறிஸ்தவ அன்பர்களே சிந்திக்கமாட்டீர்களா? இவ்வாரான ஆபாசங்களை குடும்பம் சகிதம் வாசிக்க முடியுமா? எந்தவித ஆபாசங்களுமற்ற இறைவேதம்தான் குர்ஆன்.ஒருமுறை முழுமையாக படித்துப்பார்த்து ஏதாவது ஒரு ஆபாசத்தை காட்டுங்கள்,இல்லவே இல்லை.சிந்தியுங்கள்!

Comments