பைபிளில் அரபியாவின் தீர்க்கதரிசனம்.

 ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாகட்டும்

கிறிஸ்தவர்கள் இறைவேதம் என்று போற்றும் பழைய ஏற்பாட்டில் (தோரா) முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புக்கள்.

கழுதையில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்?

ஏசாயா 21:7 வரும் முன்னறிவிப்பை கிறிஸ்தவர்கள் இயேசுவைக் குறிப்பதாக கூறுகின்றனர்.அந்த வசனம்,

''அவன் ஒரு இரதத்தையும், ஜோடு ஜோடான குதிரைவீரரையும், ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து.''

மேற்குறிப்பிட்ட வசனத்தை ஆதாரமாக கொண்டு  கிறிஸ்தவர்கள் இந்த முன்னறிவிப்பு இயேசுவின் காலத்தில் நிறைவேறியதாக கூறுகின்றனர்.கிறிஸ்தவர்களின்  புதிய ஏற்பாட்டில் மத்தேயு கூறியுள்ளதாவது,

''சீசர்  போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழுதையையும்,குட்டியையும் கொண்டு வந்து அவைகள்மேல் தங்கள் வஸ்திரத்தைப்  போடவே அவர்  அவைகளின் மேல் உட்கார்ந்தார்.''(மத்தேயு 21:7)

ஆகவே இயேசு ஒரு ஜோடு கழுதையில் ஏறிச் சென்றதால் ஏசாயா 21:7 கூறப்பட்ட முன்னறிவிப்பு நிறைவேறியதாக கிறிஸ்தவர்கள் வாதாடுகின்றனர்.ஆனால் இந்த முன்னிறிவிப்பில் ஜோடு ஜோடான குதிரை வீரரையும்,ஜோடு ஜோடாகக் கழுதைகளின் மேழும்,ஒட்டகங்களில் மேழும் ஏறி வருகிறவர்கள் என்று கூறப்பட்டதை மத்தேயுவோ,கிறிஸ்தவர்களேர் நோக்கவில்லை.சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனிக்காமல் கழுதையில் ஏறிவருவார் என்பதை மட்டும் நோக்கியதால்தான் இந்தக் குழப்பம்.இங்கே குறிப்பிடப்படுவது ஒருவர் தொடர்பாக அல்ல.ஒரு கூட்டத்தைப் பற்றித்தான் இங்கே கூறப்படுகிறது என்பதை யாரும் அறியலாம்.இயேசு குதிரையிலோ, ஒட்டகத்திலோ ஏறியதுண்டா?  குதிரை,கழுதை,ஒட்டகம் போன்ற வாகனங்களை உபயோகித்தது  நபி (ஸல்) அவர்களதும், அவர்களது சமூகமும்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

குதிரையில் ஏறிவரும் தீர்க்கதரிசி யார்?

ஏசாயா 21:9 இல் கூறப்பட்டுள்ளதாவது,

 ''இதோஇ ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரகதேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.''

இந்த முன்னறிவிப்பு தெளிவாக முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றித்தான் கூறுகிறது.அவரது வருகையின் பின்னரே பாபிலோன் விழுந்தது.சிலை வணக்கம் ஒழிக்கப்பட்டது.பாபிலோன் என்பது ஈரான்இஈராக்குடைய தலை நகராக அன்றிருந்தது.இன்று வரை அங்கே முஸ்லிம்களது ஆட்சியே நிலவுகிறது.

அரபியாவில் தோன்றும் தீர்க்கதரிசனம் எது?

ஏசாயா 21:13 முதல் 15 வரையான வசனங்கள்

.13. ''அரபியாவின் பாரம்  . திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.''

14.'' தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.''

15.'' அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும் நாணேற்றின வில்லுக்கும்இ யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.''


அரபியாவில் நடக்கக்கூடிய ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த வசனங்கள் கூறுகின்றது.அரபியாவின்  காடுகளில் தங்குமாறும்,தேமா தேசத்தவர்களிடம் தப்பி ஓடி வருபவர்களுக்கு தண்ணீரும், அப்பமும் கொடுக்குமாறும்  கூறப்பட்டுள்ளது.மேழும் இவ்வாறு வருபவர்கள் யுத்தத்தின் கொடுமைக்கு  தப்பி ஓடிவருபவர்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது. யார்  அவ்வாறு வருபவர்கள்?

இதோ அடுத்த வசனங்களை நோக்குங்கள்.

''ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய  வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம்  அற்றுப்போம்''.ஏசாயா 21:16

''கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.''ஏசாயா 21:17


அவ்வாறு வருபவர்களால் கேதார் வமசத்தினுடைய பெருமைகளெல்லாம் ஒரு வருடத்தில் இல்லாமல்  ஒழிக்கப்படும்.கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரருடைய தொகை கொஞ்சமாக மிஞ்சும் என்று கூறப்பட்டுள்ளது.கேதார்  என்பது இஸ்மவேலுடைய இரண்டாவது மகனுடைய பரம்பரை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.அந்தப்  பரம்பரைதான் அரபுக்கள்.கேதாருடைய பரம்பரையில்தான் முஹம்மத் நபி வந்தார்கள்.

இப்போது முஹம்மத் நபியுடைய காலத்திற்கு  சென்று பாருங்கள். முஹம்மத் நபியவர்கள் இஸ்லாத்தை போதித்த பொழுது கேதார்  வம்சமாகிய அரபுக்கள் நபியுடைய போதனைகளை ஏற்றவர்களை துன்புறுத்தியபோது அவர்கள அபிசீனியாஇமதீனா ஆகிய தேசங்களுக்கு  தப்பிச் சென்றார்கள்.மதீனாவிற்குச் சென்று ஒரு வருடத்தில் ஆட்சியை நிறுவி மீண்டும் கேதார்  பரம்பரையாகிய அரபுக்களின் கொட்டத்தை அடக்கினார்கள்.முதலாவது போர்க்களத்தில் கேதாரியர்கள் வேரறுக்கப்பட்டார்கள்.

முக்கியமாக இன்னொரு விடயத்தையும் இங்கே கவனிக்க வேண்டும் ஏசாயா 21:17வது வசனத்தை நோக்குங்கள்.

''கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.''ஏசாயா 21:17

இந்த வசனத்தில் கேதார் புத்திரரான வில் வீரரின் தொகையில்  கொஞ்சப் பேரே மிச்சமாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.இது ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்களோடு பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்டவர்களின் தொகை 313 என்ற சொற்பத் தொகையை குறிக்கின்றது.அது மட்டுமல்லாமல் வில் வீரராக இருந்தவர்கள் நபிகள் நாயகம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே கிறிஸ்தவ சகோதரர்கள்  இவற்றை ஆராய்ந்து பார்த்து இறைவனின் இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்று சுவர்க்கம் செல்ல வேண்டும்.ஏனெனில் கேதார் பரம்பரையில் வரக்கூடிய தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்குமாறு கர்த்தர் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Comments