இஸ்லாமிய மார்க்கத்தை கற்க நினைக்கும் எமது அன்பிற்குறிய மாற்றுமத சகோதர,சகோதரிகளுக்காக தொடராக சில முக்கிய தகவல்களை எமது இணையத்தளத்தினூடாக பிரசுரிக்க எண்ணி சில கட்டுரைகளை பிரசுரித்து உள்ளோம்.அந்தத் தொடரில் இஸ்லாத்தின் பிரதான கடமைகள் என்ன? என்பதை தருகிறோம்.
''இஸ்லாம் ஐந்து மீது அமைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒருவன் என (உறுதி) கொண்டு தொழுகையை நிறைவேற்றி, ஜகாத்தும் கொடுத்து, நோன்பு (நோற்று)ம் ஹஜ்ஜும் (செய்ய) வேண்டும் என்ற ஐந்து அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டுள்ளது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல் முஸ்லிம்,ஹதீஸ் எண் : 62
இஸ்லாத்தின் பிரதான கடமைகள் ஐந்தாகும்.
1.வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.முஹம்மது அல்லாஹ்வுடைய தூதரும்,அடியாரும் ஆவார் என்பதை அறிந்து,நம்பி ஏற்று நடக்கவேண்டும்.
2.தினமும் ஐவேளை இறைவனைத் தொழு வேண்டும்.
3.வருடத்தில் ஒரு மாதம் (ரமழான் மாதம்) நோன்பு (உபவாசம்) நோற்க வேண்டும்.
4.செல்வந்தர்கள் தனது சொத்திலிருந்து 2.5வீதம் ஏழைகளுக்கு தர்மம் கொடுக்க வேண்டும்.அதற்கு ஸக்காத் என்று சொல்லப்படும்.
5.ஹஜ் என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும்.யாருக்கு மக்கா சென்று கஃபா என்ற ஆலையத்தை தரிசிக்க உடல் ஆரோக்கியமும்,பண வசதியும் இருக்கின்றதோ அவர்களுக்குத்தான் ஹஜ் கடமை.
இந்த ஐந்து கடமைகளில் முதல் மூன்று கடமைகளும் பொதுவாக புத்திசுவாதீனமுள்ள அனைத்து முஸ்லிம்களுக்குமான கடமைகளாகும்.ஸக்காத்,ஹஜ் போன்ற கடமைகள் வசதி படைத்த தனவந்தர்களுக்கு கடமையாகும்.

Comments
Post a Comment