ஏக இறைவனின் சாந்தி சத்தியத்தை நேசிக்கும் அனைவரின் மீதும் நிலவட்டும்.
அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதரர்களே!
இணையத்தளத்தில் www.answeringislam.com என்ற இணையத்தள முகவரியூடாக கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பல தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அறியாமல், அல்லது அறிந்து கொண்டே வேண்டுமென்று தவறாக சித்தரிக்கிறார்கள்.அந்த அடிப்படையில் சாலொமோன் மன்னரைப் பற்றி குர்ஆன் கூறும் வரலாற்றை கிறிஸ்தவர்கள் மறுதலித்து சில கட்டுரைகளை பதிவேற்றியுள்ளார்கள்.அந்த கட்டுரைகளுக்கான மறுப்புக் கட்டுரையே இது.
1.சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு - பிசாசுக்களோடு ஐக்கியம்
சாலொமோனுக்கு ஷைத்தான்களையும்,ஜின்களையும் வசப்படுத்தி கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது.
''இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.''
''இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.'' (குர்-ஆன் 21:81,82)
''பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?' என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.' '(27:39)
''இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: 'உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்' என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; 'இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்' என்று (ஸுலைமான்) கூறினார்.'' (குர்-ஆன் 27:39,40)
இந்த குர்ஆன் வசனங்களை குறிப்பிட்டு கிறிஸ்தவர்கள் குர்ஆன் இறைத்தூதர்களை அவமதித்துள்ளதாக கூறுகின்றனர்.பைபிள் ஷைத்தானோடு ஐக்கியம் வைக்க வேண்டாம் என்று கூறுகிறதாம்.குர்ஆன் ஷைத்தான்களை நண்பர்களாக்குகிறதாம்.
நமது மறுப்பு
இந்த வசனங்களில் கூறப்படுவதைக் கூட சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்தான் இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள்.முதலில் ஜின்கள் என்றால் என்ன என்பதை இவர்கள் புரிய வேண்டும்.மனிதனது கண்ணுக்கு புலப்படாத நெருப்பினால் படைக்கப்பட்ட ஒரு இனமே ஜின்களாவர்.ஜின்களில் இறைவனை வணங்குபவர்களும் உள்ளனர்.இறைவனுக்கு மாறு செய்பவர்களும் உள்ளனர்.ஜின் இனத்தில் இறைவனுக்கு மாறு செய்பவர்களே ஷைத்தான்களாவர்.அதே போன்று மனிதர்களிலும் இறைவனுக்கு மாறு செய்பவர்களையும் குர்ஆன் ஷைத்தான் என்று அழைக்கிறது.ஆக அல்லாஹ் இங்கே கூறுவதை கவனியுங்கள்.
''இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம். ''(குர்-ஆன் 21:82)
சாலொமோன் ஷைத்தான்களோடு ஐக்கியம் வைத்தார் என்று குர்ஆனில் இல்லவே இல்லை.அல்லாஹ் ஜின்களையும்,ஜின்களிலுள்ள ஷைத்தான்களையும் சாலொமோனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான் என்றுதான் உள்ளது.இது ஒரு அற்புதம்.ஷைத்தான்கள் சாலொமோனுக்கு கட்டுப்பட்டிருந்தது.சாலொமோன் ஷைத்தான்களுக்கு கட்டுப்பட்டிருக்கவில்லை.ஆக ஷைத்தான்களை (பிசாசுகளை) சாலொமோன் கட்டுப்படுத்தி நிர்வகித்தார் என்றுதான் உள்ளது.அந்த ஆற்றலை தேவன் சாலொமோனுக்கு கொடுத்திருந்தார்.ஜின்கள் சாலொமோனுக்கு உதவியாக பல வேலைகளை செய்து கொடுத்தன.பிசாசுகளை வசப்படுத்தி கொடுத்தது சாலொமோனை உயர்ந்த அந்தஸ்த்தில் வைக்கவே.அதைத்தான் குர்ஆன் கூறுகிறது.மாறாக சாலொமோனே பிசாசுகளோடு ஐக்கியம் வைத்துக் கொண்டார் என்று குர்ஆனில் எங்குமே இல்லை.இது குர்ஆனில் ஏதாவது குறை கூறவேண்டும் என்பதற்காக கூறப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்.
''ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.'' (மாற்கு 3:10,11)
இங்கே அசுத்த ஆவிகள் (ஷைத்தான்கள்) இயேசுவை விசுவாசித்து அவருக்கு பணிந்ததாக பைபிள் கூறுகிறது.அப்படியானால் இயேசு பிசாசுகளோடு ஐக்கியம் வைத்தாரா? இல்லை இயேசுவுக்கு தேவன் பிசாசுகளை அடக்கியாளும் ஆற்றலைக் கொடுத்தானா? ஆம் இயேசுவுக்கு பிசாசுகளை பணியும்படி இயேசுவுக்கு ஆற்றலை தேவன் கொடுத்ததனால் அவை இயேசுவுக்கு பணிந்தன.அதேதான் சாலொமோன் விடையத்திலும்.தேவன் சாலொமோனுக்கு கொடுத்த ஆற்றலால் பிசாசுகள் அவருக்கு கட்டுப்பட்டன.
மறுப்புகள் தொடரும்.....
Comments
Post a Comment